/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளி சீட்டு மோசடி; நடவடிக்கை எடுக்க மனு
/
தீபாவளி சீட்டு மோசடி; நடவடிக்கை எடுக்க மனு
ADDED : பிப் 10, 2025 10:42 PM
பொள்ளாச்சி; 'தீபாவளி சீட்டு மற்றும் பிற சீட்டுகள் நடத்தி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சூளேஸ்வரன்பட்டி பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார்.சூளேஸ்வரன்பட்டி, 3 முதல், எட்டாவது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
சூளேஸ்வரன்பட்டியில், கடந்த ஏழு ஆண்டு காலமாக தனி நபர் தீபாவளி சீட்டு மற்றும் பரிசு சீட்டுகள் நடத்தி ஏமாற்றியுள்ளார். அவர் பணம் வசூலித்த பின், சீட்டுக்கு உண்டான தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவருமே கூலி வேலைக்கு சென்று சேர்த்த பணத்தை, ஒவ்வொருவரிடமும், 30 ஆயிரம் ரூபாய் முதல், 70ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்துள்ளார்.
இது குறித்து, பொள்ளாச்சி போலீஸ், கோவை மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.