/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னபூர்ணாவில் தீபாவளி சிறப்பு 'ஸ்வீட் மேளா'
/
அன்னபூர்ணாவில் தீபாவளி சிறப்பு 'ஸ்வீட் மேளா'
ADDED : அக் 26, 2024 11:26 PM

கோவை: அன்னபூர்ணாவில் தீபாவளி ஸ்வீட் மேளா நேற்று துவங்கி 30ம் தேதி வரை, 5 நாட்கள் கோவை மேட்டுப்பாளையம் ரோடு, ஆர்.எஸ்.புரம், பீப்பிள்ஸ் பார்க், கணபதி, அவிநாசி ரோடு ஆகிய கிளைகளில் நடைபெறுகிறது.
ஸ்வீட் மேளாவை, பீப்பிள்ஸ் பார்க், அன்னபூர்ணா கிளையில், அன்னபூர்ணா குழுமத்தின் செயல் இயக்குனர் விவேக் துவங்கி வைத்தார். முதல் விற்பனையை பண்ணாரி அம்மன் குழும இயக்குனர் உமா பெற்று கொண்டார்.
அன்னபூர்ணா குழுமத்தின் செயல் இயக்குனர் விவேக் கூறியதாவது:
ஒவ்வொரு வருடமும் புது ரகங்களில் இனிப்புகளையும், கார வகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்த வருடம் 300க்கும் அதிகமான இனிப்பு வகைகளை, விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். ரூ.200 முதல் இனிப்புகள் இங்கு கிடைக்கும். 7 வகைகளில் காஜூ பைட்ஸ் உள்ளது.
மூன்று மாதங்கள் வரை கெட்டு போகாது. கிப்ட் கூப்பன்கள் ரூ.100 முதல் ரூ.1000 வரை, அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், கிளை மேலாளர் சுரேஷ்குமார், துணை மேலாளர் மகேந்திரன் பங்கேற்றனர்.