/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ அன்னபூர்ணாவில் தீபாவளி இனிப்பு திருவிழா
/
ஸ்ரீ அன்னபூர்ணாவில் தீபாவளி இனிப்பு திருவிழா
ADDED : அக் 16, 2025 05:48 AM

கோவை: ஸ்ரீ அன்னபூர்ணாவின் 'தீபாவளி ஸ்வீட் மேளா', நேற்று துவங்கியது.
'பீப்பிள்ஸ் பார்க்' கிளையில் நடந்த ஸ்வீட் மேளாவை, ஸ்ரீ அன்னபூர்ணாவின் செயல் இயக்குனர்கள் விவேக் சீனிவாசன் மற்றும் கார்த்திக் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மேளாவில், சாக்லேட் பர்பி, காஜு பர்பி, பியூர் மேங்கோ பர்பி, பாதாம் மைசூர் பா, காஜு பைட் மேங்கோ, பாதாம் பிஸ்தா நட்ஸ் பர்பி, ட்ரை புரூட் அல்வா, மினி ஜிலேபி, சந்திரகலா, கசாட்டா கேக், அன்ஜீர் கேக், காஜு ரோல், காஜு மைசூர் பா, பிஸ்தா மைசூர் பா, திரிவேணி சக்ரா என, 100க்கும் மேற்பட்ட, சுத்தமான நெய் இனிப்புகள், வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளன.
கவர்ந்திழுக்கும் ரியல் மைசூர் பா மற்றும் பாதாம், முந்திரி, ஏலக்காய், திராட்சை, கற்கண்டு கலவையுடன் தயாரிக்கப்படும் அமுத லட்டு ஆகியவை, பலரின் விருப்பத் தேர்வாக அமைகின்றன.
தீபாவளி பண்டிகையின் மகிழ்ச்சியை, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள, ரூ.100 முதல் ரூ.1,000 வரை சிறப்பு வவுச்சர்கள், ஸ்ரீ அன்னபூர்ணாவின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்.
வரும் ஞாயிறன்று நிறைவடையும் ஐந்து நாள் மேளா, ஸ்ரீ அன்னபூர்ணாவின் கணபதி, அவிநாசி தேசிய நெடுஞ்சாலை, அவிநாசி சாலை, ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் சாலை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், துடியலூர் மற்றும் பீப்பிள்ஸ் பார்க் கிளைகளில் நடக்கின்றன.