/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., பிரமுகர் புகார் பா.ஜ.,வினர் 13 பேர் கைது
/
தி.மு.க., பிரமுகர் புகார் பா.ஜ.,வினர் 13 பேர் கைது
தி.மு.க., பிரமுகர் புகார் பா.ஜ.,வினர் 13 பேர் கைது
தி.மு.க., பிரமுகர் புகார் பா.ஜ.,வினர் 13 பேர் கைது
ADDED : ஜன 24, 2024 01:09 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி தி.மு.க., பிரமுகர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட, பா.ஜ.,வினர், 13 பேரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், சமூகவலைதளத்தில் ராமர் குறித்து இழிவாக கருத்து வெளியிட்டார். இதை கண்டித்து, பொள்ளாச்சி நகர பா.ஜ.,வினர், அவரது வீட்டை முற்றுகையிட்டு பஜனை பாடல்களை பாடினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்வராஜ் மகனும், தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் மற்றும் குடும்பத்தினர், பெரியார் வாழ்க என கோஷங்களை எழுப்பினர். இதனால், இருதரப்புக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்து மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில், கூட்டம் கூடுதல், அத்துமீறி நுழைதல், தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தல், பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட, 10 பிரிவுகளின் கீழ், பா.ஜ., நகர தலைவர் பரமகுரு உள்ளிட்ட, 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

