தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 16, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

: வர்த்தக காஸ் சிலிண்டர் தடுப்பாடு கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அன்னுார் பயணியர் மாளிகை முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. தி.மு.க., நகரச் செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் ஒட்டர்பாளையத்தில், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையிலும், தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் தனபாலன் தலைமையில் கணேசபுரத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ச ர்க்கார் சாமக்குளம் ஒன்றிய தி.மு.க., சார்பில், கோவில் பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன், ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

* சூலுார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்பாட்டத்துக்கு, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தளபதி முருகேசன் தலைமை வகித்தார். அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் மனோகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் பங்கேற்றனர் .

* பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில், இ.கம்யூ., கட்சியினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் தலைமை வகித்தார். வணிக சிலிண்டர் பற்றாக்குறையால் பெரும்பாலான துறைகள் பெரும் நெருக்கடியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரச்னைக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனக் கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

---நிருபர் குழு-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us