/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 25, 2025 06:13 AM

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிதைக்கும் வகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்ட திருத்தத்தைக்கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், ஒன்றிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உடுமலை ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பி., ஈஸ்வரசாமி தலைமை வகித்தார். நகரச்செயலாளர் வேலுசாமி மற்றும் ஒன்றியச்செயலாளர்கள், காங்., - மா.கம்யூ., - இ.கம்யூ., உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
* மடத்துக்குளத்தில், மாவட்ட அவைத்தலைவர் ஜெயராம கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குடிமங்கலம் ஒன்றியம், பெதப்பம்பட்டியில், ஒன்றியச்செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு ஒன்றியச்செயலாளர் முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே ஆர்.எஸ்., ரோட்டில் தி.மு.க., பா.ஜ., அரசை கண்டித்து கிணத்துக்கடவு தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை தலைமையில் போராட்டம் நடந்தது. தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
- நிருபர் குழு -:.

