/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உள்ளாட்சி கவுன்சிலர் இடைத்தேர்தல் பதவிகளை தக்க வைக்க தி.மு.க., முயற்சி
/
உள்ளாட்சி கவுன்சிலர் இடைத்தேர்தல் பதவிகளை தக்க வைக்க தி.மு.க., முயற்சி
உள்ளாட்சி கவுன்சிலர் இடைத்தேர்தல் பதவிகளை தக்க வைக்க தி.மு.க., முயற்சி
உள்ளாட்சி கவுன்சிலர் இடைத்தேர்தல் பதவிகளை தக்க வைக்க தி.மு.க., முயற்சி
ADDED : ஏப் 28, 2025 11:50 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் பதவிகளை தக்க வைக்க, தி.மு.க., கடும் முயற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில், 14 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கூடலூர் நகராட்சி, 23 வது வார்டு உறுப்பினர் தொடர்ந்து மூன்று முறை நகராட்சி மன்ற கூட்டத்தில் ஆஜராகவில்லை. இதனால், கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இவர் தி.மு.க.,வை சேர்ந்தவர். நம்பர்: 4 வீரபாண்டி பேரூராட்சி, 13 வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக இருந்தவர் காலமானதால், அந்த வார்டிலும் தேர்தல் நடக்கிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி, 2வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் காலமானதால், அந்த வார்டுக்கும் தேர்தல் நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கூடலூர் நகராட்சி, வீரபாண்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் காலியாக உள்ள, 3 வார்டுகளிலும், ஏற்கனவே, தி.மு.க.,வை சேர்ந்தவர்களே வார்டு கவுன்சிலராக இருந்தனர். அடுத்த மாதம் நடக்கவுள்ள வார்டு கவுன்சிலர்களுக்கான இடைத்தேர்தலில் வார்டுகளை தக்க வைக்க தி.மு.க., கடும் முயற்சியில் ஈடுபட உள்ளது.
கடந்த முறை தேர்தலின் போது வெகு குறைந்த ஓட்டுகள் எண்ணிக்கையில் அ.தி.மு.க., பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை தவற விட்டதால், இந்த முறை அவர்களும் களத்தில் பலம் காட்ட முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து, அ.தி.மு.க.,வினர் கூறுகையில்,' உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை இதுவரை எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. போட்டியிட கட்சி தலைமை முடிவு செய்தால், தேர்தலில் வெற்றி பெற முழு பலத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்' என்றனர்.
இந்நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவை அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகம் மற்றும் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

