ஒருநாள் முன்பே பிரசாரம் துவங்கிய தி.மு.க. வேட்பாளர்
ஒருநாள் முன்பே பிரசாரம் துவங்கிய தி.மு.க. வேட்பாளர்
ADDED : ஏப் 09, 2026 09:16 PM

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் தொகுதியில், தி.மு.க. வேட்பாளராக கார்த்திகேயன் போட்டியிடுகிறார். ஒரு வாரமாக, தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வந்தார். ஏப். 10 முதல் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளார்.
இன்று (ஏப்.10) அஷ்டமி, அதற்கு அடுத்தநாள் நவமி என்பதால், மாலையே, ராகு காலம் முடிந்த பின் மாலை, 4:00 மணிக்கு, சொந்த ஊரான நரசீபுரத்தில் உள்ள தர்மராஜா கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிரசாரத்தை துவக்கினார். ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசி ஓட்டு கேட்டார்.
கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமே, தலா 5 நிமிடங்கள் பேசினர். அதன்பின், வேட்பாளர் பிரசாரத்தை முடித்துவிட்டு, செயல்வீரர்கள் கூட்டத்திற்கு சென்றுவிட்டார். தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, காங்கிரஸ் மாநில துணை தலைவர் கந்தசாமி, துணை மேயர் வெற்றிச்செல்வன் கலந்து கொண்டனர்.
