ADDED : மார் 16, 2026 06:05 AM
பொள்ளாச்சி: ''தமிழக மக்கள் இனி தி.மு.க.,வை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்,'' என, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
பொள்ளாச்சியில், தேசிய ஜனநாயக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற இவர் கூறியதாவது:
துாத்துக்குடியில் மக்கள், கனிமொழியை துரத்தி அடித்தது போல், தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தமிழகத்தில் எங்கேயும் பிரவேசித்து, மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க., எத்தனை கட்சி கூட்டணி அமைத்து வந்தாலும், இனி எதிர்க்கட்சியாக கூட வர முடியாது. இனி எப்போதும், தமிழக மக்கள் தி.மு.க.,வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அரசியல் வாழ்வு வேண்டுமென்றால், த.வெ.க., கூட்டணி குறித்து முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், த.வெ.க., தடம் தெரியாமல் போய் விடும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
