/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூமி பூஜை போட்டும் வேலை நடக்கலை தி.மு.க. கவுன்சிலர் புகாரால் பரபரப்பு

ADDED : நவ 30, 2025 05:35 AM
கோவை: கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது.
பூமி பூஜை போட்ட இரு திட்டங்கள் தொடர்பாக, இன்னும் பணி துவங்கவில்லை என, 45வது வார்டு ஆளுங்கட்சி கவுன்சிலர் பேபி சுதா குறை கூறினார். அதைக்கேட்ட மேயர், ''நீங்களே இப்படி சொல்லலாமா... இருக்கையில் அமருங்கள்,'' என்றார்.
'வார்டு பிரச்னைகளை மன்றத்தில் பேசாமல் என்ன செய்வது. ஒவ்வொரு முறையும் உட்காரச் சொல்கிறீர்களே' என, பேபி சுதா தொடர்ந்து பேசினார்.
'தி.மு.க., கவுன்சிலரே இப்படி பேசக்கூடாது. இது, தவறான செயல்' என கூறி, மண்டல தலைவர் மீனா உள்ளிட்டோர் கண்டித்தனர்.
அதைப் பொருட்படுத்தாமல் பேசிய பேபி சுதா, ''உங்களுக்கு தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதீர்கள். எனது வார்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?'' என, மண்டல தலைவர் மீனாவை நேருக்கு நேராக தாக்கிப் பேசினார்.
இப்பிரச்னையால், மன்ற கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.