/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.டி.நாயுடு பெயர் பலகையில் ஜாதியை அழித்த தி.மு.க., புள்ளி
/
ஜி.டி.நாயுடு பெயர் பலகையில் ஜாதியை அழித்த தி.மு.க., புள்ளி
ஜி.டி.நாயுடு பெயர் பலகையில் ஜாதியை அழித்த தி.மு.க., புள்ளி
ஜி.டி.நாயுடு பெயர் பலகையில் ஜாதியை அழித்த தி.மு.க., புள்ளி
ADDED : ஜன 15, 2024 12:43 AM
கோவை:கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஜி.டி., என்ற பெயரில் வீதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் புதிதாக பெயர் பலகை வைத்த, கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர், அதில் 'ஜி.டி.நாயுடு சாலை' என குறிப்பிட்டு இருந்தனர்.
இந்நிலையில், அதே பகுதியில் இருந்து வரும் ரேஸ்கோர்ஸ் ரகுநாதன் என்ற தி.மு.க., பிரமுகர், நாயுடு என்ற சாதி பெயருடன், பெயர் பலகை வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த சாதி பெயரை கருப்பு மையால் அழித்தார்.
தமிழகம் முழுவதும் ஊர் மற்றும் வீதிகளில், ஜாதி பெயரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், சாதி பெயருடன் கூடிய பெயர் பலகை வைக்கப்பட்டதால் அதை அழித்ததாக, தி.மு.க., பிரமுகரும், சினிமா தயாரிப்பாளருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாதன் தெரிவித்தார்.
இவரது இந்த செயலுக்கு, கோவையில் உள்ள பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.