/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தி.மு.க. பொறியாளர் அணியினர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்'
/
'தி.மு.க. பொறியாளர் அணியினர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்'
'தி.மு.க. பொறியாளர் அணியினர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்'
'தி.மு.க. பொறியாளர் அணியினர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்'
ADDED : ஆக 31, 2025 10:50 PM
அன்னுார்; தி.மு.க., பொறியாளர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் கோவை அருகே அன்னுாரில் நேற்று நடந்தது. அணியின் மாநில செயலாளர் கருணா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தென் மாவட்ட நிர்வாகி ஒருவர் பேசுகையில், பொறியாளர் அணி சார்பில் கட்சியில் பல பணிகள் செய்கிறோம். எனினும் இதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சித் துறையில் அரசு பணி வழங்க வேண்டும்.
இதனால் மேலும் ஊக்கமுடன் செயல்பட முடியும், என்றார். இவர் பேசிய உடன் பலர் விசில் அடித்து வரவேற்றனர். பலத்த கைதட்டலுடன் சிலர் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சரும் தி.மு.க., மேற்கு மண்டல பொறுப்பாளருமான, செந்தில் பாலாஜி பேசுகையில், பொறியாளர் அணியினரின் கோரிக்கைகள் குறித்து துணைப் பொதுச் செயலாளருடன் சேர்ந்து தலைமையிடம் பேசுகிறோம், என்றார்.
தி.மு.க., துணை பொதுச்செயலாளர் எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், 'வருகிற தேர்தல் வழக்கமான தேர்தல் இல்லை. இது தத்துவங்களுக்கிடையிலான போராட்டம். ஆனால் இந்த தத்துவத்துக்கு எதிரான மத்திய அரசு, இங்கு சில எட்டப்பன்களை கூட்டு சேர்த்துக் கொண்டு, தி.மு.க., அரசை வீழ்த்த முயற்சிக்கிறது.
இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.