தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநாட்டு நிதி கேட்டு மிரட்டிய தே.மு.தி.க., நிர்வாகி கைது

 மாநாட்டு நிதி கேட்டு மிரட்டிய தே.மு.தி.க., நிர்வாகி கைது

 மாநாட்டு நிதி கேட்டு மிரட்டிய தே.மு.தி.க., நிர்வாகி கைது


ADDED : ஜன 08, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 05:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வானுார்: சென்னையைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன், 50. இவர் கிளியனுார் அருகே தென்கோடிபாக்கத்தில் கல் குவாரி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் குவாரியில் இருக்கும்போது, தே.மு.தி.க., கிளியனுார் ஒன்றிய செயலர் தணிகைவேல், 35, மற்றும் நல்லாவூரைச் சேர்ந்த தே.மு .தி.க., பிரமுகர் கலியமூர்த்தி, 35, ஆகியோர் சென்றனர்.

பாலகிருஷ்ணனிடம், கடலுார் மாவட்டத்தில், தே.மு.தி.க., மாநாடு நடக்கிறது. அதற்கு நிதி வழங்கும் படி இருவரும் கேட்டனர். குவாரி உரிமையாளர் நிதி தர மறுத்ததால், அவருக்கு மிரட்டல் விடுத்தனர்.

பாலகிருஷ்ணன் புகாரில், கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து, ஒன்றிய செயலர் தணிகைவேலை கைது செய்தனர். தலைமறைவான கலியமூர்த்தியை போலீசார் தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us