sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 துணை சுகாதார நிலையத்தில் தி.மு.க. நிர்வாகி தங்குவதா!

/

 துணை சுகாதார நிலையத்தில் தி.மு.க. நிர்வாகி தங்குவதா!

 துணை சுகாதார நிலையத்தில் தி.மு.க. நிர்வாகி தங்குவதா!

 துணை சுகாதார நிலையத்தில் தி.மு.க. நிர்வாகி தங்குவதா!


ADDED : மார் 09, 2026 07:42 AM

Google News

ADDED : மார் 09, 2026 07:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி: வடவள்ளி, வி.என்.ஆர். நகரில் உள்ள துணை சுகாதார நிலையத்தில், தி.மு.க. நிர்வாகி வசித்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மாநகராட்சி 36வது வார்டு, வடவள்ளி, வி.என்.ஆர். நகரில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு கனிதா என்பவர், நகர் நல செவிலியராக பணிபுரிகிறார். இவரது கணவர் ஷியாம் சுந்தர் தி.மு.க. பொறியாளர் அணியில் துணை அமைப்பாளராக உள்ளார்.

செவிலியர் கனிதா, அவரது கணவர் மற்றும் குழந்தையுடன், துணை சுகாதார நிலையத்தில், தங்கி பணிபுரிந்து வருகிறார். தி.மு.க. நிர்வாகி, அரசு கட்டடத்தில் தங்கி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் மோகனிடம் கேட்டபோது, கனிகா, அப்பகுதியில் நகர் நல செவிலியராக பணியாற்றி வருகிறார். துணை சுகாதார நிலையத்தில் தங்கி, அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பரிசோதனை செய்வது, தடுப்பூசி போடுவது போன்ற பணிகளை செய்து வருகிறார். நகர் நல செவிலியர், தான் பணிபுரியும் துணை சுகாதார நிலையத்தில், குடும்பத்துடன் தங்கி இருக்கலாம். ஒரு பகுதியை தங்குவதற்கும், மற்றொரு பகுதியை பணியிடத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் விதிமீறல் எதுவுமில்லை, என்றார்.






      Dinamalar
      Follow us