குழந்தைகளுக்கான பிரத்யேக பல் மருத்துவ பிரிவு துவக்கம்
குழந்தைகளுக்கான பிரத்யேக பல் மருத்துவ பிரிவு துவக்கம்
ADDED : மார் 09, 2026 07:45 AM

அ நிறம் | அளவு
கோவை: விமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் மருத்துவமனை சார்பில், குழந்தைகளுக்கான பிரத்யேக பல் மருத்துவ மையம் துவக்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையின் குழந்தைகளுக்கான பிரத்யேக வெளிநோயாளிகள் பிரிவு, மேட்டுப்பாளையம் சாலை எருக்கம்பெனி அருகில் சங்கர் டிம்பர் பில்டிங் முதல் தளத்தில் அமைந்துள்ளது. அதில் குழந்தைகளுக்கான பிரத்யேக பல் மருத்துவ மையம் துவக்கப்பட்டுள்ளது. மூத்த பல் மருத்துவர் ராஜ்குமார் மையத்தை துவக்கிவைத்தார்.
விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை இயக்குனர் மிருதுபாஷினி, நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன், தலைமை நிர்வாக இயக்குனர் ஜெயராம், டாக்டர் பத்மநாபன், டாக்டர் அபர்ணா, தலைமை இயக்க அலுவலர் ரம்யா, மைய தலைவர் சபரிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விவரங்களுக்கு 63844 00034, 0422- 4040202.
