ADDED : மார் 23, 2026 09:43 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அன்னுார் சாலையில் தி.மு.க., கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.
மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், 9 பறக்கும் படை குழுவினர், 9 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பகுதியாக, சிறுமுகை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் -- அன்னுார் சாலையில் உள்ள டி.ஆர்.எஸ்., வி.ஐ.பி. சிட்டி என்னும் வீட்டு மனையில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் சார்பில், அனுமதியில்லாமல், சுமார் 70 அடி உயரத்தில் தி.மு.க., கொடி கம்பம் வைக்கப்பட்டிருந்தது. இதை பறக்கும் படையினர் நேற்று அகற்றினர்.
----
