/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் இறந்த மூதாட்டிக்கு நிதி
/
தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் இறந்த மூதாட்டிக்கு நிதி
தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் இறந்த மூதாட்டிக்கு நிதி
தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் இறந்த மூதாட்டிக்கு நிதி
ADDED : டிச 27, 2025 05:22 AM
அன்னூர், மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சில திருத்தங்களை அறிவித்தது. இதை எதிர்த்து, தி.மு.க., கூட்டணி சார்பில், அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன், கடந்த 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்காக அழைத்து வரப்பட்டிருந்த, 80 வயது மூதாட்டியும், 100 நாள் திட்டதொழிலாளியுமான பொன்னம்மாள் ஆர்ப்பாட்டத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
இதையடுத்து தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ் குமார், நேற்று மேகிணறில் உள்ள பொன்னம்மாள் இல்லத்திற்கு சென்றார். அங்கு அவரது மகன் வேலுச்சாமி உள்ளிட்டோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கட்சி சார்பில், பொன்னம்மாள் குடும்பத்தாருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, தனபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

