/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பா.ஜ., தொண்டர்கள் மீது தி.மு.க., அரசின் பொய் வழக்கு'
/
'பா.ஜ., தொண்டர்கள் மீது தி.மு.க., அரசின் பொய் வழக்கு'
'பா.ஜ., தொண்டர்கள் மீது தி.மு.க., அரசின் பொய் வழக்கு'
'பா.ஜ., தொண்டர்கள் மீது தி.மு.க., அரசின் பொய் வழக்கு'
ADDED : மார் 16, 2026 06:22 AM

அன்னுார்: 'பா.ஜ., தொண்டர்கள் மீது தி.மு.க., அரசு பொய் வழக்கு போட்டுள்ளது' என, வக்கீல்கள் பிரிவு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட வக்கீல் பிரிவு நிர்வாகிகள் கூட்டம், அன்னுாரில் நடந்தது. வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.
வக்கீல் பிரிவு மாநில செயலாளர் கீர்த்தி கண்ணன் பேசுகையில், ''பா.ஜ., தொண்டர்கள் மீது தி.மு.க., அரசு பொய் வழக்குகள் போடுகிறது,'' என்றார்.
மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் வக்கீல்களாக தேர்வு செய்யப்பட்டோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பா.ஜ., தொண்டர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை, தி.மு.க., அரசு ரத்து செய்ய வேண்டும். நீதித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். கோவையில் உயர் நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வக்கீல் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

