/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
/
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
ADDED : மார் 13, 2024 01:43 AM

மேட்டுப்பாளையம்;தி.மு.க., அரசை கண்டித்து, கோவை புறநகரில் அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறியதை கண்டித்தும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்காத, தி.மு.க., அரசை கண்டித்தும், கோவை வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மனித சங்கிலி போராட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது.
மேட்டுப்பாளையம், ரயில்வே ஸ்டேஷன் சாலையிலிருந்து, பஸ் ஸ்டாண்ட் வரை, சாலையின் ஓரத்தில், அ.தி.மு.க.,வினர் கைகளை கோர்த்து, மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் தி.மு.க., அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார். தி.மு.க., அரசு பதவி ஏற்ற நாளில் இருந்து, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டு உள்ளது.
தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின், எதிர்காலம் சீரழிந்து வருகிறது.போதை பொருள் கடத்தலால், இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கு காரணமான, தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என, போராட்டத்தில் பங்கேற்றவர்கள், கோஷங்கள் எழுப்பினர். இதேபோன்று காரமடை, சிறுமுகையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அன்னுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், போதை பொருள் நடமாட்டத்தை கண்டித்தும், கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும் தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் தலைமை வகித்தார். இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

