ADDED : ஏப் 11, 2026 05:26 AM

அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் தி.மு.க. சார்பில் கவிதா கல்யாணசுந்தரம் போட்டியிடுகிறார். தி.மு.க.வில் இருந்து விலகிய சண்முகசுந்தரம் சுயேச்சையாக நிற்கிறார்.
சிறுமுகை சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்தது. பள்ளிவாசல் முன், கவிதாவுக்கு ஓட்டு கேட்டு, தி.மு.க.வினர் நின்று கொண்டிருந்தனர். எதிரே சண்முகசுந்தரம் தலையில் வெள்ளை குல்லா அணிந்து ஓட்டு கேட்க நின்று கொண்டிருந்தார்.
தொழுகை முடிந்து வந்தவர்களிடம் இரு தரப்பினரும் பிட் நோட்டீஸ் கொடுத்தனர். ''துரோகிக்கு ஓட்டு போடாதீர்” என தி.மு.க.வினர் கோஷமிட்டனர். ”இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் துரோகி யார் என்று எல்லோருக்கும் தெரியும்” என சண்முகசுந்தரம் ஆவேசமாக சொன்னார். மோதல் வெடிக்குமுன் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலையிட்டு சமாதானம் செய்தார்.
