/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தி.மு.க.,வுக்கு பணம் பதவி மீது பைத்தியம்'
/
'தி.மு.க.,வுக்கு பணம் பதவி மீது பைத்தியம்'
ADDED : பிப் 17, 2024 02:26 AM

பொள்ளாச்சி:''தி.மு.க.,வுக்கு பணம், பதவி, அதிகாரம் மீது பைத்தியம்,'' என, பொள்ளாச்சியில் நடந்த அ.தி.மு.க., தெருமுனை பிரசாரத்தில், கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா பேசினார்.
பொள்ளாச்சி நகர அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரசாரம் நடந்தது. கோட்டூர் ரோடு, திருவள்ளுவர் திடல் மற்றும் புது பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த தெருமுனைப்பிரசாரத்துக்கு, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் மக்கள் சேவை செய்வதால் துாங்க முடியாமல் இருந்தனர். ஆனால், இன்று தி.மு.க., ஆட்சியில், அமைச்சர்களால் துாக்கமின்றி தவிப்பதாக முதல்வர் ஸ்டாலினே புலம்புகிறார்.
ஊழல் அமைச்சர்களை வைத்து, தி.மு.க.,வை நடத்துகின்றனர். தி.மு.க., அரசு, கடன் வாங்குவது, அராஜகம், வாரிசு அரசியல் என மக்களுக்கு உதவாத விஷயங்களில், 'நம்பர் ஒன்' ஆக உள்ளது.
ராஜாவுக்கு, எம்.ஜி.ஆர்., வ.உ.சி., பற்றி பேச எந்த அறுகதையும் இல்லை. தி.மு.க., வெற்றி பெற முக்கிய காரணமே எம்.ஜி.ஆர்., தான் என்பதை உணர வேண்டும்.அ.தி.மு.க.,வில் இருப்பவர்கள், மக்கள் பணி, சேவை செய்யணும் என்பதில் பைத்தியமாக உள்ளனர்.
ஆனால், தி.மு.க.,வினருக்கு, பணம், பதவி, அதிகாரம், ஊழல் போன்றவற்றில் பைத்தியமாக உள்ளனர். பா.ஜ.,வினர், 17 முன்னாள் எம்.எல்.ஏ.,க்களை கட்சியில் சேர்ப்பதற்கு பதில் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து இருக்கலாம்.
மீண்டும் புதிய வாக்குறுதிகள், திட்டங்களோடு வந்து ஏமாற்ற பார்க்கும் தி.மு.க.,வை நம்ப வேண்டாம். வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.