/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஐ.ஆர்., முகாம்களில் தி.மு.க.,வினர் அடாவடி; பா.ஜ., முற்றுகை
/
எஸ்.ஐ.ஆர்., முகாம்களில் தி.மு.க.,வினர் அடாவடி; பா.ஜ., முற்றுகை
எஸ்.ஐ.ஆர்., முகாம்களில் தி.மு.க.,வினர் அடாவடி; பா.ஜ., முற்றுகை
எஸ்.ஐ.ஆர்., முகாம்களில் தி.மு.க.,வினர் அடாவடி; பா.ஜ., முற்றுகை
ADDED : நவ 17, 2025 01:53 AM

பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட எஸ்.ஐ.ஆர்., முகாம்களில், தி.மு.க.,வினர் வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் இரு தினங்களாக நடந்தன. இதில் வாக்காளர்கள் எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்களை நிரப்ப, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உதவினர்.
முகாம்கள் இரண்டு தினங்களும் காலை, 10.00 மணி முதல் மாலை, 6.00 மணி வரை அனைத்து ஓட்டு சாவடிகளிலும் நடந்தது.
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கே.என்.ஜி., புதூர் ஓட்டு சாவடிகளில் ஓட்டு சாவடி நிலை அலுவலர்களின் உதவியுடன் தி.மு.க.,வினர் சிலர் ஓட்டு சாவடிக்கு வரும் வாக்காளர்களின் பெயர், முகவரி, அவர்களுடைய மொபைல் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை தனியாக ஒரு நோட்டில் எழுதி வைத்தனர். இதற்கு அப்பகுதி பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க.,வினர் விவரங்கள் குறித்து வைத்திருந்த நோட்டை ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் வாங்கிக் கொண்டனர். பின்னர் சிறிது நேரத்தில், அதை அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டனர். இதையடுத்து தி.மு.க.,வினர் மீது கவுண்டம்பாளையம் பா.ஜ., பூத் ஏஜென்ட் ரமேஷ், கவுண்டம்பாளையம் போலீசில் அளித்த புகாரில், கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க., தமிழ்ச்செல்வன் மற்றும் தி.மு.க.,வினர் மீதும், ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட ஓட்டு சாவடி நிலை அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார்.
ஒரே நேரத்தில் திரளான பா.ஜ.,வினர் கவுண்டம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மாநில தலைமைக்கு மெயில் அனுப்பப்படும் என, பா.ஜ., மாநில செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.

