/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராம்நகர் ராமர் கோவிலில் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம்
/
ராம்நகர் ராமர் கோவிலில் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம்
ராம்நகர் ராமர் கோவிலில் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம்
ராம்நகர் ராமர் கோவிலில் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம்
ADDED : நவ 17, 2025 01:53 AM

கோவை: ராம்நகரில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில், லிதா சகஸ்ரநாமம் பாராயணம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 400க்கு மேற்பட்ட பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுகுணா சுவாமிநாதன் கூறியதாவது:
லலிதா சஹஸ்ரநாமம் பாராயணத்தை தொடர்ந்து செய்யும் போது, ஆத்ம திருப்தி ஏற்படும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, நேர்மறை எண்ணங்கள் தோன்றும். சிந்தனையும், செயலும் சிறப்பாக இருக்கும். எந்த வகை நோய் வந்தாலும், இந்த ஸ்லோகத்தை சொன்னால் தீரும்.
எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், துாய மனதுடன் அம்பிகையைத் துதித்தால், உயர்ந்த நிலையான மோட்சம் கிடைக்கும். அனைத்து நலன்களும் கிடைக்கும். பொன், பொருள், புகழ் போன்ற அனைத்து நலன்களையும், லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதன் மூலம் பெறலாம். அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

