ADDED : மார் 16, 2026 06:35 AM

அ நிறம் | அளவு
கோவை: மத்திய அரசை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., சார்பில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதாவது, பகுதிக்கு ஒன்று என, 60க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரத்தினபுரியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் செந்தமிழ் செல்வன் தலைமை வகித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்காதே, தமிழ்நாட்டிற்கான நிதி எங்கே என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. காஸ் சிலிண்டர்களுக்கு மாலை போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்., ம.தி.மு.க., கம்யூ., கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
