/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க. ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் புறக்கணிப்பு
/
தி.மு.க. ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் புறக்கணிப்பு
ADDED : டிச 26, 2025 05:17 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தை காங். கட்சியினர் புறக்கணித்தனர்.
மத்திய அரசு, 100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கு பதிலாக, 125 நாட்கள் கொண்ட புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், கோவை எம்.பி. ராஜ்குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குமார், கார்த்தி உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், காங். கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை.
வட்டார காங். தலைவர் மோகன்ராஜ் கூறுகையில்,எங்களுக்கு அழைப்பு இல்லை. சில நாட்களுக்கு முன்பு நடந்த தி.மு.க. கூட்டணி கூட்டத்திலும் பங்கேற்க அழைப்பு அனுப்பவில்லை என்றார். தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது கருத்து கூற மறுத்து விட்டனர்.

