சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க.,வை ஓரங்கட்ட வேண்டும் / தி.மு.க.,வை ஓரங்கட்ட வேண்டும்
/
கோயம்புத்தூர்
தி.மு.க.,வை ஓரங்கட்ட வேண்டும்
5
ADDED : டிச 05, 2024 07:09 AM
கோவை சிவானந்தா காலனியில், வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தலைமை வகித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வங்கதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நீக்கப்பட்டு, அங்கு இஸ்லாமிய அடிப்படைவாத அரசு வந்ததிலிருந்து, இந்துக்கள் நுாற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காளி மற்றும் இஸ்கான் கோவில்களை கொளுத்தியுள்ளனர். இந்துக்களுக்கு எதிராக, வங்கதேசத்தில் தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்துக்களுக்கு அனுதாபம் தெரிவித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட, இந்து விரோத தி.மு.க., அரசு, அனுமதி மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாலஸ்தீனத்தில் இருப்பவர்களுக்காக, குரல் கொடுக்க அனுமதிக்கும் தி.மு.க., அரசு, நமக்கு அருகே வங்கதேசத்தில் இருக்கும் 1.30 கோடி இந்துக்களுக்கு ஆதரவாக ஏன் பேசக்கூடாது?தமிழகத்தில், தி.மு.க., அரசு நீக்கப்பட்டால் தான், இந்துக்கள் சம உரிமையுடனும், கவுரவத்தோடும் வாழ முடியும். இதற்காக, நாம் வரும் 2026 தேர்தலை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்கும் தி.மு.க.,வினர், அடுத்த தேர்தலில் ஓரம் கட்டப்பட வேண்டும். இல்லையென்றால் இந்துக்கள் சமய உரிமையோடு, தமிழகத்தில் வாழ முடியாது. இந்து கோவில்கள் இருக்காது. இவ்வாறு, அவர் கூறினார்.