/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., வினர் பா.ஜ., வில் ஐக்கியம்
/
தி.மு.க., வினர் பா.ஜ., வில் ஐக்கியம்
ADDED : மார் 20, 2024 09:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிமங்கலம் : பல்வேறு கட்சியினர், பா.ஜ., வில் இணையும் விழா புதுப்பாளையம் கிராமத்தில் நடந்தது.
குடிமங்கலம் தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பல்வேறு கட்சியினர், பா.ஜ., வில் இணையும் விழா புதுப்பாளையத்தில் நடந்தது. ஒன்றியத்தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார்.
பா.ஜ., திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி முன்னிலை வகித்தார். புதுப்பாளையம் ஜெயபிரகாஷ் தலைமையில், தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள், பா.ஜ., வில் இணைந்தனர். அவர்களை, பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்று பேசினர்.

