ADDED : மார் 14, 2026 06:24 AM

சூலுார்: முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், சூலுார், வால்பாறை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி உட்பட நான்கு சட்டசபை தொகுதிகளில், நலத்திட்ட உதவி வழங்கும் பணி துவங்கியுள்ளது.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராசிபாளையம் ஊராட்சி, அருகம்பாளையத்தில் கிராமத்தில் நலத்திட்ட உதவியை, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தளபதி முருகேசன் துவக்கி வைத்து பேசுகையில், ''அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், தி.மு.க., அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஒரு குடும்பத்தில் ஒருவராவது அரசு திட்டங்களால் பயன் பெற்றிருக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு அரசு செயல்படுகிறது,'' என்றார்.
சூலுார் வடக்கு ஒன்றிய செயலாளர் சிபி செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் தமிழரசி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
