/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எதிர்கட்சியாக கூட தி.மு.க., வராது: எம்.எல்.ஏ., ஜெயராமன் ஆருடம்
/
எதிர்கட்சியாக கூட தி.மு.க., வராது: எம்.எல்.ஏ., ஜெயராமன் ஆருடம்
எதிர்கட்சியாக கூட தி.மு.க., வராது: எம்.எல்.ஏ., ஜெயராமன் ஆருடம்
எதிர்கட்சியாக கூட தி.மு.க., வராது: எம்.எல்.ஏ., ஜெயராமன் ஆருடம்
ADDED : ஜூலை 18, 2025 12:20 AM
பொள்ளாச்சி; ''தமிழகத்தில், எதிர்கட்சியாக கூட தி.மு.க., வராது,'' என, பொள்ளாச்சியில் நடந்த எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் எம்.எல்.ஏ., ஜெயராமன் பேசினார்.
பொள்ளாச்சியில், எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், பங்கேற்ற எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை துவங்கியது முதல் முதல்வர் ஸ்டாலின் மனநிலை பேதலித்து விட்டது. என்னமோ பேசுகிறார்; என்ன பேசுகிறார் என அவருக்கே தெரிவதில்லை.
வெகு விரைவில், தி.மு.க., ஆட்சி வீட்டுக்கு போகும். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் செல்லும் இடமெல்லாம் பலஆயிரம் மக்கள் கூடுகின்றனர். ஆளுங்கட்சியாக அ.தி.மு.க., அமரும். அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சியே எதிர்கட்சியாக அமரும்.
எதிர்கட்சியாக கூட தி.மு.க., வராது. தி.மு.க.,வின் சகாப்தம் முடியப்போகிறது.
இவ்வாறு, பேசினார்.