/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 நாள் திட்டத்தில் தி.மு.க. முறைகேடு பா.ஜ. விவசாய அணி தலைவர் புகார்
/
100 நாள் திட்டத்தில் தி.மு.க. முறைகேடு பா.ஜ. விவசாய அணி தலைவர் புகார்
100 நாள் திட்டத்தில் தி.மு.க. முறைகேடு பா.ஜ. விவசாய அணி தலைவர் புகார்
100 நாள் திட்டத்தில் தி.மு.க. முறைகேடு பா.ஜ. விவசாய அணி தலைவர் புகார்
ADDED : டிச 26, 2025 05:15 AM

அன்னூர்: '100 நாள் வேலை திட்டத்தில், தி.மு.க., அரசு முறைகேடு செய்கிறது,' என பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் புகார் தெரிவித்தார்.
பா.ஜ., விவசாய அணி சார்பில், பொன்னே கவுண்டன் புதூரில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா நடந்தது.
இதில் பங்கேற்ற பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் நிருபர்களிடம் பேசுகையில், மத்திய அரசு, நூறு நாள் வேலை திட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்கள் தொழிலாளர்களுக்கு நன்மை தரக்கூடியது. தொழிலாளர்களுக்கு வேலையில்லாத நாட்களில் உதவக் கூடியது.
மத்திய அரசு, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தக்கூடிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலே திமுக அரசு திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இந்த நிதியை முறைகேடாக பயன்படுத்துகிறது. அமைச்சர் பெரியசாமி தன்னுடைய தொகுதியில் இந்தத் திட்டத்தை ஓட்டு வாங்க பயன்படுத்தி வருகிறார். அரசியல் லாபத்திற்காக இந்த திருத்தத்தை தி.மு.க., எதிர்க்கிறது.
அன்னூர் அருகே ஆர்ப்பாட்டத்திற்காக மிரட்டி வரவழைக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் வெயிலில் நின்று மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
தி.மு.க., அரசின் அரசியல் நாடகத்திற்கு ஒரு உயிர் பலியாகி உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க.,வினர் கள்ள ஓட்டு போடுவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். எனவே, தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து குரல் கொடுக்கின்றனர், என்றார்.
விழாவில் பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, விவசாய அண மாவட்ட தலைவர் வெள்ளியங்கிரி, மாநில செயலாளர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், அறிவு சார் பிரிவு மாநில செயலாளர் ஜெயபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

