தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'டிஎன் ஸ்பார்க்' திட்ட செயல்பாடு கல்வி அலுவலர்கள் ஆலோசனை

 'டிஎன் ஸ்பார்க்' திட்ட செயல்பாடு கல்வி அலுவலர்கள் ஆலோசனை

 'டிஎன் ஸ்பார்க்' திட்ட செயல்பாடு கல்வி அலுவலர்கள் ஆலோசனை


ADDED : ஜன 06, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

அரசு பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்த, பள்ளி கல்வித்துறை சார்பில் 'டிஎன் ஸ்பார்க்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அடிப்படை கணினி அறிவியல் மற்றும் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

வரும், 2026ம் கல்வியாண்டுக்கான, 'டி.என். ஸ்பார்க்' திட்ட செயல்பாடு குறித்து கருத்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம், ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் தலைமை வகித்து பேசுகையில்,' சிறந்த மாணவரை அடையாளம் காண வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது,' என்றார்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (கல்வித்துறை) ஆனந்தி, காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றார். மாநில பாடத்திட்டத்தை பின்பற்றி, சிறப்பாக செயல்படும் மாணவருக்கு பிரத்யேக விடைத்தாள் வழங்கி தகுதித்தேர்வு நடத்துவது, திறன் கண்டறிவது குறித்து விவாதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி ஆய்வுக்கு செல்லும் கல்வி அலுவலர், சிறந்த ஆசிரியர், மாணவர், மாணவிக்கு 'இ சான்றிதழ்' வழங்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது; அதுகுறித்தும் கூட்டத்தில் விளக்கப்பட்டது.

மாநில அளவிலான கருத்தரங்கில் பங்கேற்று பயிற்சி பெற்ற, கல்பனா (குமார் நகர் பள்ளி), நந்தகுமார் (லக்கம நாயக்கன்பட்டி), ரிஷிசுதன் (என்.சி.பி. தாராபுரம் பள்ளி), பிரபாகரன் (சுல்தான்பேட்டை நடுநிலைப்பள்ளி) ஆகியோர் மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், பள்ளி துணை ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு பயிற்சி வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us