/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டி.என்.சி.டி., நிறுவனம் சார்பில் 'மேக்னம் சிட்டி' திட்டம் அறிமுகம்
/
டி.என்.சி.டி., நிறுவனம் சார்பில் 'மேக்னம் சிட்டி' திட்டம் அறிமுகம்
டி.என்.சி.டி., நிறுவனம் சார்பில் 'மேக்னம் சிட்டி' திட்டம் அறிமுகம்
டி.என்.சி.டி., நிறுவனம் சார்பில் 'மேக்னம் சிட்டி' திட்டம் அறிமுகம்
ADDED : செப் 05, 2025 10:13 PM

கோவை:
கே.ஜி., குழுமத்தின் அங்கமான டி.என்.சி.டி. நிறுவனம், கோவை கொடிசியா மற்றும் டைடல் பூங்காவுக்கு அருகில், மேக்னம் சிட்டி' எனும் அடுக்குமாடி குடியிருப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
நிர்வாக இயக்குனர் சஞ்சனா விஜயகுமார் கூறியதாவது:டி.என்.சி.டி. நிறுவனம், ப்ரீகாஸ்ட் கட்டுமான தொழில்நுட்பத்தில், கோவையில் குடியிருப்பு வீடுகளை அறிமுகப்படுத்திய முன்னோடி நிறுவனமாக உள்ளது. இத்தொழில்நுட்பம் வாயிலாக, தரமான கட்டடம், விரைவான ஒப்படைப்பு, குறைந்த பொருள் விரயம் மற்றும் நீண்ட கால ஆயுள் ஆகியவற்றை உறுதி செய்கிறது.
தற்போது, கொடிசியா அருகில், தரமான அடுக்குமாடி குடியிருப்பை ஏற்படுத்தி வருகிறது. சிறப்பு அறிமுக சலுகை, 1 பி.எச்.கே., அடுக்குமாடி குடியிருப்புகள் 33 லட்சம், 2 பி.எச்.கே., ரூ.56.99 லட்சம், 3 பி.எச்.கே., ரூ.74.99 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டு வசதி, ஸ்கேட்டிங் ரிங், நடைபாதை, கெசிடோ பார்க், உடற்பயிற்சி கூடம் என, பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
நேற்று துவங்கிய 'மேக்னம்' கொண்டாட்டம், நாளை வரை நடக்கிறது. நடன நிகழ்ச்சி, புகைப்பட அரங்கு, குழந்தைகளுக்கான ஓவிய பட்டறைகள் இடம் பெற உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். விபரங்களுக்கு: 76676 99999, 76674 66666. இணையதளம்: www.tncd.in