/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டாசு கடைகளுக்கு உரிமம் வேண்டுமா?
/
பட்டாசு கடைகளுக்கு உரிமம் வேண்டுமா?
ADDED : ஜூன் 30, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசுக்கடைகள் அமைக்க உரிமம் பெற மாநகர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
தீபாவளிப் பண்டிகை வரும் அக்., 20 ம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விரும்புவோர் தகுந்த ஆவணங்களுடன் வரும், 15 ம் தேதி முதல் ஆக., 14 ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.