/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நாய்களை சீண்டவோ, விளையாடவோ குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம்'
/
'நாய்களை சீண்டவோ, விளையாடவோ குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம்'
'நாய்களை சீண்டவோ, விளையாடவோ குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம்'
'நாய்களை சீண்டவோ, விளையாடவோ குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம்'
ADDED : அக் 16, 2025 09:00 PM
கோவை: கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர், காரமடை பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுவன் ரேபீஸ் அறிகுறியுடன், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
தண்ணீரை பார்த்தாலும், காற்று அடித்தாலும் பயந்து ரேபீஸ் அறிகுறியுடன் காணப்பட்டார். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, 15 மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தொற்று பாதிப்பு என்பதால், உடல் கூறு ஆய்வுகள் ஏதும் இன்றி, உடனடியாக கோவையிலேயே உடல் எரியூட்டப்பட்டதாக, காரமடை சுகாாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, கோவை அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி கூறியதாவது:
சிறுவனின் தலை முதல் கால் வரை, பரிசோதனை செய்ததில் நாய் கடிக்கான காயம் எதும் இல்லை. ஆனால், மருத்துவ பரிசோதனையில் மூளையில் ரேபீஸ் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் இருந்தன. பெற்றோர் நாய் கடிக்கவில்லை என்றே கூறுகின்றனர்.
நாய் கடியால் தான் தொற்று வந்தது என உறுதியாக கூறமுடியாது. பூனை, வவ்வால் போன்றவை வாயிலாகவும், ரேபீஸ் பாதிப்பு ஏற்படும். சிறுவனுக்கு முன்பு எப்போதாவது நாய் கடித்து இருக்கலாம். அல்லது சிறுவனுக்கு இருந்த ஏதேனும் காயத்தில் நாய் நக்கி இருக்கலாம்.
ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து, ரேபீஸ் வைரஸ் பாதிப்பு பல மாதங்கள், ஏன் ஆண்டுக்கு பின்னர் கூட வெளிப்படும்.
நாய்களை சீண்டவோ, தெரியாத நாய்களை தொட்டு விளையாடவோ குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம். ஏதேனும் சூழல்களில், நாய் கடித்தாலோ, கீறினாலோ பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
2025ல் நாய் கடிக்காக 12,983 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். நாய்க்கு தடுப்பூசி போடுவதும், நாய் கடித்தால் நாம் தடுப்பூசி செலுத்துவதும் அவசியம். ரேபீஸ் தொற்று வந்துவிட்டால் உயிரை காப்பாற்றுவது சாத்தியமில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.
பூனை, வவ்வால் போன்றவை வாயிலாகவும், ரேபீஸ் பாதிப்பு ஏற்படும். சிறுவனுக்கு முன்பு எப்போதாவது நாய் கடித்து இருக்கலாம். அல்லது சிறுவனுக்கு இருந்த ஏதேனும் காயத்தில் நாய் நக்கி இருக்கலாம். ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து, ரேபீஸ் வைரஸ் பாதிப்பு பல மாதங்கள், ஏன் ஆண்டுக்கு பின்னர் கூட வெளிப்படும்.