/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கம்பம் ஏறாதீங்க!
/
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கம்பம் ஏறாதீங்க!
ADDED : ஜன 29, 2024 11:11 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, செக்போஸ்ட் பகுதியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், கம்பம் ஏறிய பணியாளரை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், செக்போஸ்ட் பகுதியில் உள்ள மின் கம்பத்தில், கேபிள் பணிக்காக பணியாளர் மின் கம்பத்தின் மீது, எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் வேலை செய்கின்றனர்.
மின்துறை பணியாளர்களே கம்பத்தில் ஏறும் பொழுது, அதில் மின்சாரம் துண்டித்த நிலையில் பணி செய்கின்றனர். ஆனால், கேபிள் பணியாளர்களோ, கம்பத்தில் மின்சாரம் செல்கிறது என்பது தெரிந்தும் அலட்சியமாக பணி செய்கின்றனர்.
இதனால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள். இதை கேபிள் பணியாளர்கள் கவனித்து, முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணியாற்ற வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.