/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணிக்கம்பட்டியை நகராட்சியுடன் இணைக்காதீங்க! வீடுகளில் கறுப்பு கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு

ADDED : பிப் 18, 2025 10:04 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியுடன், பணிக்கம்பட்டி ஊராட்சியை இணைக்க கூடாது, என, அப்பகுதி மக்கள், வீடுகளில் கறுப்பு கொடி கட்டியும், கடைகளை அடைத்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பொள்ளாச்சி நகராட்சியுடன், ஆச்சிப்பட்டி, பணிக்கம்பட்டி, புளியம்பட்டி, மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம் ஆகிய ஐந்து ஊராட்சிகளை இணைக்க அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கு, ஐந்து ஊராட்சிகளிலும் எதிர்ப்பு தெரிவித்து, சப் - கலெக்டர் மற்றும் மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
இந்நிலையில், பணிக்கம்பட்டி ஊராட்சி மக்கள், வியாபாரிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், வீடுகளில் கறுப்பு கொடி கட்டியும், கடைகளை அடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் கூறியதாவது: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பணிக்கம்பட்டியை, நகராட்சியுடன் இணைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளோம்.
ஒட்டு மொத்தமாக இதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், வீடுகள் தோறும் கறுப்பு கொடி கட்டப்பட்டுள்ளது.
இப்பகுதியில் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் வசிக்கிறோம். போர்வெல், அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
நகராட்சியுடன் இணைத்தால், வரி உயர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளை சந்திக்க வேண்டும். மேலும், வேலை உறுதி திட்டத்தை நம்பியுள்ள, 400க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, கிராம ஊராட்சியாகவே தொடர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.