/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சிகளை நகராட்சியோடு இணைக்க வேண்டாம்! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
/
ஊராட்சிகளை நகராட்சியோடு இணைக்க வேண்டாம்! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
ஊராட்சிகளை நகராட்சியோடு இணைக்க வேண்டாம்! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
ஊராட்சிகளை நகராட்சியோடு இணைக்க வேண்டாம்! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜன 20, 2025 11:06 PM

பொள்ளாச்சி; 'ஆச்சிப்பட்டி, புளியம்பட்டி ஊராட்சிகளை, நகராட்சியோடு இணைக்க வேண்டாம்,' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. நகர்புற நிலவரி திட்டம் துணை ஆணையர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஆச்சிப்பட்டி, புளியம்பட்டி ஊராட்சிகள், பொள்ளாச்சி நகராட்சியோடு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஊராட்சிகள், மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் பெரிய ஊராட்சியாகும்.
பொள்ளாச்சி நகராட்சியை தாண்டி பல கி.மீ., துாரம் உள்ள கிராமங்களை இணைத்த ஊராட்சிகளாகும். விவசாயம் சார்ந்த தொழிலையும், விவசாய கூலித்தொழிலாளர்களும் அதிகளவு உள்ளனர்.
இங்கு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தை நம்பி பலர் உள்ளனர். இந்த பகுதியை நகராட்சியோடு இணைக்கும்போது, அந்த திட்டத்தில் பயன்பெற்று வந்த மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, மறு பரிசீலனை செய்து, இந்த பகுதிகள், ஊராட்சியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சிலை
ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
அம்பேத்கர், இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பெண்களின் உரிமை மீட்பு, கல்வி, சட்டம், வங்கி, நீர் மேலாண்மை, தொழிலாளர் உரிமைகள் என இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். தமிழக அரசால், அம்பேத்கர் பிறந்த நாள், சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோன்று புதியதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அம்பேத்கர் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.
'பார்' வேண்டாம்!
பொள்ளாச்சி சேதுபதி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி நகராட்சி, 23வது வார்டு கோபாலகிருஷ்ணா அவென்யூ, சுந்தரம் அவென்யூ, பி.ஏ., கார்டன் எக்ஸ்டன்சன், சேதுபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதி அருகே, 'எப்எல்2 பார்' துவங்க கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுகிறது. 'பார்' அமைக்கப்பட்டால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
பி.ஏ., கார்டன் எக்ஸடன்சன் லே - அவுட் அருகே, பள்ளி, கோவில் உள்ளிட்டவற்றுக்கு இடம் ஒதுக்கப்பட உள்ளது. இச்சூழலில் 'பார்' அமைத்தால், பாதிப்பு ஏற்படும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, 'எப்எல்2 பார்' துவங்க உரிமம் வழங்க வேண்டாம்.
இவ்வாறு, வலியுறுத்தியுள்ளனர்.

