/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்ச்சலுக்கு சுயவைத்தியம் வேண்டாம்- சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
/
காய்ச்சலுக்கு சுயவைத்தியம் வேண்டாம்- சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
காய்ச்சலுக்கு சுயவைத்தியம் வேண்டாம்- சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
காய்ச்சலுக்கு சுயவைத்தியம் வேண்டாம்- சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
ADDED : பிப் 16, 2025 11:32 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை சுற்று வட்டார பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் வந்தால் மருத்துவமனை வந்து மருத்துவரை அணுக வேண்டும், சுயமாக மாத்திரை சாப்பிடக்கூடாது என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில், பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காரமடை வட்டார சுகாதாரத்துறையின் வாயிலாக காய்ச்சல் பாதிப்பு உள்ள இடங்களில் மருத்துவ குழுவினர் நேரில் சென்று சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் காய்ச்சல் தொடர்பாக வரும் புகார்கள் குறித்து கள ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து காரமடை வட்டார சுகாதாரத்துறையினர் கூறுகையில், ''காரமடை வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சளி, காய்ச்சல் தொடர்பாக அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. தண்ணீரை காய்ச்சி தான் குடிக்க வேண்டும். அதிக பணி இருக்கும் சமயத்தில், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
தும்மல், இருமல் இருப்போர் முககவசம் அணிய வேண்டும். காய்ச்சல் வந்தால் மருத்துவமனை வந்து மருத்துவரை அணுக வேண்டும், சுயமாக மாத்திரை சாப்பிடக்கூடாது. மருத்தகங்களில் பிரிஸ்கிரிப்ஷன் இன்றி மருந்து, மாத்திரைகள் வழங்கக்கூடாது என அறுவுறுத்தி வருகிறோம்,'' என்றனர்.-----

