/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீராறில் இருந்து கேரளாவுக்கு நீர் வழங்காதீங்க! புதிய ஆயக்கட்டு பாசன சங்கம் வலியுறுத்தல்
/
நீராறில் இருந்து கேரளாவுக்கு நீர் வழங்காதீங்க! புதிய ஆயக்கட்டு பாசன சங்கம் வலியுறுத்தல்
நீராறில் இருந்து கேரளாவுக்கு நீர் வழங்காதீங்க! புதிய ஆயக்கட்டு பாசன சங்கம் வலியுறுத்தல்
நீராறில் இருந்து கேரளாவுக்கு நீர் வழங்காதீங்க! புதிய ஆயக்கட்டு பாசன சங்கம் வலியுறுத்தல்
ADDED : செப் 19, 2024 10:08 PM

ஆனைமலை : 'ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தும் வரை, குறைந்தபட்சமாக நீராறில் இருந்து கேரளாவுக்கு நீர் வழங்குவதையாவது நிறுத்த வேண்டும்,' என, ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க கூட்டம், தென்சங்கம்பாளையம் வேதநாயகம் கலையரங்கத்தில் நடந்தது. பாசன சங்க தலைவர் அசோக்குமார், செயலாளர் முருகேசன், திட்டக்குழு தலைவர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஆயக்கட்டு பரப்புகள் பல்வேறு உட்பிரிவுகளாக பிரிந்துள்ள நிலையில், பழைய பாசன அட்டவணையே பயன்படுத்தபடுகிறது. இதனால், நீர் பங்கீட்டில் பல்வேறு பிரச்னைகள், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், பூமியை விற்பனை செய்தவர்கள் பெயர் உள்ளது. தற்போதைய நில உரிமையாளர்களின் பெயரில் பாசன பரப்பு அட்டவணை தயார் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
வேலை உறுதி திட்டத்தில், கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட கால்வாய்கைள சுத்தப்படுத்துவது போல, பேரூராட்சி பகுதியில் உள்ள கால்வாய்களையும் சுத்தப்படுத்த வேண்டும்.
உபரிநீரை வீணாக்காமல் கால்வாய்கள் வாயிலாக, குளம், குட்டைகளை நிரம்ப வழி செய்த நீர்வளத்துறை அதிகாரிகள், திட்டக்குழு தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கிளை கால்வாய்களில் உள்ள பல ஷட்டர்கள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதால் கடைமடைகளுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை. வரும் பாசனத்துக்கு முன், பழுதான ஷட்டர்களை மாற்றியமைக்க வேண்டும்.
பி.ஏ.பி., திட்ட பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான, ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தும் வரை, குறைந்தபட்சமாக நீராறில் இருந்து, அக்., முதல் ஜன., வரை கேரளாவுக்கு நீர் வழங்குவதையாவது நிறுத்த வேண்டும். ஏனெனில் இடைமலையாறு அணை கட்டும் வரையே நீராறில் இருந்து நீர் வழங்க வேண்டுமென ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.