/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மாதவிடாய் காலங்களில் பகலில் துாங்க கூடாது'
/
'மாதவிடாய் காலங்களில் பகலில் துாங்க கூடாது'
ADDED : நவ 07, 2024 08:17 PM
மேட்டுப்பாளையம்,; 'மாதவிடாய் காலங்களில் பகலில் தூக்கம் கூடாது' என ஆயுர்வேத மருத்துவர்கள் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.
தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு 9வது தேசிய ஆயுர்வேத தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவையில் 'மகளிர் நலனில் ஆயுர்வேதம்' என்ற தலைப்பில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனப்போராட்டம் குறித்து ஆயுர்வேத மருத்துவர்கள் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து தோல்பாளையம், ஆயுர்வேதா அரசு மருத்துவ உதவி அலுவலர் மருத்துவர் மேகலை கூறியதாவது :
மாதவிடாய் காலத்தில் மருத்துவ மற்றும் சுகாதார விழிப்புணர்வு தேவை. சிலருக்கு மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பு தலைவலி, மனப் போராட்டம், வாந்தி, வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற நிலை ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அனுசரிக்க வேண்டிய சில விதிமுறைகள் ஆயுர்வேத மருத்துவ நுால்களில் கூறப்பட்டுள்ளது. பகலில் துாக்கம் கூடாது. மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். காரம், புளிப்பு போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜீரணிப்பதற்கு எளிதான உணவுகளை எடுக்க வேண்டும். இந்த விதிகளை அனுசரிப்பதனால் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் காலத்தில் உடலில் ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்களை நன்கு மாற்றி அமைக்க உதவுகிறது. சிறிய திராட்சைகளை ஊற வைத்த நீர், வெந்தயம் ஊற வைத்து நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உளுந்தங்கஞ்சி வைத்து குடிக்கலாம். இதனால் உடல் பலம் பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

