/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாக்டர் சொல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது
/
டாக்டர் சொல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது
டாக்டர் சொல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது
டாக்டர் சொல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது
ADDED : நவ 23, 2025 05:30 AM
ஆ ன்டிபயாடிக் மருந்துகளை, டாக்டர்கள் பரிந்துரையின்றி பயன்படுத்துவது பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
சளி, காய்ச்சல், இருமல், சிறுநீர் பாதை, தொண்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொற்று பாதிப்பால் ஏற்படும் நோய்களுக்கு, பாதிப்புகளுக்கு தகுந்தவாறு, ஆன்டிபயாடிக் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு முறை பரிந்துரைக்கப்பட்ட மருந்தை, பல முறை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தும்போது, பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக, இந்திய குழந்தைகள் நல டாக்டர்கள் சங்க தமிழக தலைவர் ராஜேந்திரன் கூறினார்:
அவர் கூறியதாவது:
ஆண்டுதோறும், நவ.,18 முதல் 24 வரை ஏ.எம்.ஆர்., ( ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்) விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக ஆன்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் போன்ற நுண்கிருமிகளை அழிக்க வழங்கப்படும் மருந்து. இவற்றை தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால், இம்மருந்துக்கு எதிரான எதிர்ப்பு திறனை, கிருமிகள் வளர்த்துக்கொள்கின்றன.
இதனால், நோயை குணமாக்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. ஒரு கட்டத்தில் தற்போதுள்ள மருந்துகளுக்கு கிருமிகள் கட்டுப்படாமல் போனால் பெரும் அபாயம் ஏற்படும்.
புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டிய சூழல் உருவாகும். அதற்குள் பல உயிரிழப்புகள் ஏற்படலாம். ஆகவே, டாக்டர்கள் பரிந்துரையின்றி மருந்து வாங்கக்கூடாது.
குறிப்பாக, ஆன்டிபயாடிக் ஏழு நாட்கள், இவ்வளவு அளவு என்றால் அதை சரியான முறையில் உட்கொள்ள வேண்டியதும் அவசியம். நோய் சரியாகிவிட்டது என இடையில் நிறுத்துவதும், மீண்டும் டாக்டர்கள் சீட்டு இன்றி வாங்கி உட்கொள்வதும் கூடாது.
இவ்வாறு, அவர் கூறினார்.

