/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காசி தமிழ் சங்கமத்துக்கு சிறப்பு ரயில்: இன்று துவங்குகிறது முன்பதிவு
/
காசி தமிழ் சங்கமத்துக்கு சிறப்பு ரயில்: இன்று துவங்குகிறது முன்பதிவு
காசி தமிழ் சங்கமத்துக்கு சிறப்பு ரயில்: இன்று துவங்குகிறது முன்பதிவு
காசி தமிழ் சங்கமத்துக்கு சிறப்பு ரயில்: இன்று துவங்குகிறது முன்பதிவு
ADDED : நவ 22, 2025 07:16 AM
கோவை: காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கு, கோவையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.
கோவை-பனாரஸ் சிறப்பு ரயில் (எண்: 06005), வரும் டிச., 3ம் தேதி புதன்கிழமை கோவையில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு, பனாரஸை , வரும் டிச.5ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11:15 மணிக்குச் சென்றடையும். மறுமார்க்கத்தில், (ரயில் எண்: 06006), பனாரஸில் இருந்து வரும் டிச., 9ம் தேதி செவ்வாய் இரவு 11:00 மணிக்குப் புறப்பட்டு, வெள்ளி காலை 8:30 மணிக்கு கோவை வந்தடையும்.
இரண்டாவது சிறப்பு ரயில் (06013), டிச., 9ம் தேதி செவ்வாய் மாலை 6:00 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மூன்றாம் நாள் வியாழன் இரவு 11:15 மணிக்கு பனாரஸை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், (எண்: 06014), பனாரஸில் இருந்து டிச., 15ம் தேதி திங்கள் இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு, கோவையை நான்காம் நாள் வியாழக்கிழமை காலை 8:30 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்களில் 3 டயர் ஏ.சி., பெட்டிகள் 10 இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6 காசி தமிழ் சங்க பங்கேற்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு 3 டயர் எகானமி ஏ.சி., பெட்டிகள், 6 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கான முன்பதிவு, இன்று காலை 8:00 மணி முதல் துவங்குகிறது.
இத்தகவலை, தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

