/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு வழிப்பாதையா, இரு வழிப்பாதையா : ஆடீஸ் வீதியில் வாகன ஓட்டிகள் திணறல்
/
ஒரு வழிப்பாதையா, இரு வழிப்பாதையா : ஆடீஸ் வீதியில் வாகன ஓட்டிகள் திணறல்
ஒரு வழிப்பாதையா, இரு வழிப்பாதையா : ஆடீஸ் வீதியில் வாகன ஓட்டிகள் திணறல்
ஒரு வழிப்பாதையா, இரு வழிப்பாதையா : ஆடீஸ் வீதியில் வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : நவ 22, 2025 07:16 AM

கோவை: அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் சந்திப்பு முக்கியமானது. பழைய மேம்பாலம் ரவுண்டானா, சுரங்கப்பாதை, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, அரசு கலை கல்லுாரி ரோடு, ரேஸ்கோர்ஸ், ஒசூர் ரோடு, நஞ்சப்பா ரோடு, ஆடீஸ் வீதி மற்றும் அவிநாசி ரோடு என பல்வேறு வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் இச்சந்திப்பில் இணைந்து, பிரிந்து செல்கின்றன.
சரியான வடிவமைப்பு இல்லாத ரவுண்டானாவால், தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இச் சூழலில், உப்பிலிபாளையம் சந்திப்பில் இருந்து ஆடீஸ் வீதிக்குச் செல்லும் வழித்தடம் மறிக்கப்பட்டு, வரிசையாக டிவைடர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
இதன் காரணமாக, நேரு ஸ்டேடியம் வழியாக ஆடீஸ் வீதியில் வரும் வாகன ஓட்டிகள், ரவுண்டானாவை கடந்து செல்ல முடியாது. இடது புறம் திரும்பி, எல்.ஐ.சி., சந்திப்புக்குச் சென்று சிக்னலில் காத்திருந்து, வலதுபுறம் திரும்பி, உப்பிலிபாளையம் சந்திப்புக்கு மீண்டும் வந்து, பயணிக்க வேண்டியிருக்கிறது.
அதேநேரம், அவிநாசி ரோட்டில் இருந்து ஆடீஸ் வீதிக்கு செல்ல முடியாத வகையில், டிவைடர்கள் வைத்திருந்தாலும், கடைசி வரை சென்று, இடது புறம் திரும்பிச் செல்கின்றனர். அப்பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.
டிவைடர் வைத்துள்ள இடத்தில், 'யூ டேர்ன்' இல்லை என, போக்குவரத்து போலீசார் போர்டு வைத்துள்ளனர். அதை யாரும் கண்டுகொள்வதில்லை. எதிர் திசையில் வாகனங்கள் வரும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
போலீசார் செய்யும் மாற்றங்கள், வாகன ஓட்டிகளுக்கு ஏற்புடையதாக இல்லாத இடங்களில், தங்கள் வசதிக்கேற்ப வாகனங்களை இயக்கிச் செல்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, ஆடீஸ் வீதியை மறித்து வைத்திருக்கும் டிவைடர்களை அகற்ற வேண்டும். விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பது சிறந்தது.

