/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டத்துக்கு வந்து இயற்கை உரம் விற்பனையா?
/
தோட்டத்துக்கு வந்து இயற்கை உரம் விற்பனையா?
ADDED : ஜன 23, 2025 11:58 PM
சூலுார்; சூலுார், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் தென்னை விவசாயம் மற்றும் காய்கறி சாகுபடி அதிகளவில் நடக்கிறது.
இந்நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சிலர், இயற்கை உரங்கள் (ஆர்கானிக் உரங்கள்) எனக்கூறி தோட்டங்களுக்கு சென்று விவசாயிகளிடம் நேரடியாக உர மூட்டைகளை விற்பதாக கூறப்படுகிறது. இதனால், பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில்,' இயற்கை உரம் எனக்கூறி விற்கப்படும் உரங்களில்  அடங்கியுள்ள சத்துக்களின் அளவு எவ்வளவு என்பது தெரியாது. அதனை பயன்படுத்த வேண்டாம். அப்படி வரும் வியாபாரிகள் குறித்து அருகில் உள்ள வேளாண் அலுவலகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும்,' என்றனர்.

