/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு புகார் குடுக்க இவ்ளோ துாரம் போகணுமா? பேரூர் கோட்டத்துக்குள் மாறுமா மகளிர் போலீஸ் ஸ்டேஷன்
/
ஒரு புகார் குடுக்க இவ்ளோ துாரம் போகணுமா? பேரூர் கோட்டத்துக்குள் மாறுமா மகளிர் போலீஸ் ஸ்டேஷன்
ஒரு புகார் குடுக்க இவ்ளோ துாரம் போகணுமா? பேரூர் கோட்டத்துக்குள் மாறுமா மகளிர் போலீஸ் ஸ்டேஷன்
ஒரு புகார் குடுக்க இவ்ளோ துாரம் போகணுமா? பேரூர் கோட்டத்துக்குள் மாறுமா மகளிர் போலீஸ் ஸ்டேஷன்
ADDED : ஏப் 23, 2025 11:26 PM
தொண்டாமுத்துார், ; பேரூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போத்தனுாரில் செயல்படுகிறது. அதனால், வெகுதொலைவு சென்று புகார் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பேரூர் உட்கோட்டத்துக்கு உட்பட்டு தொண்டாமுத்துார், காருண்யா நகர், ஆலாந்துறை, பேரூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, கே.ஜி.சாவடி, பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகிய எட்டு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
இதில், மாவட்ட போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இல்லாமல் இருந்ததால், அப்பகுதி மக்களும் புகார் அளிக்கும் வகையில், போத்தனுாரில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது.
கருமத்தம்பட்டி உட்கோட்டத்துக்காக, 2023ல், சூலுாரில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டது. ஆனால், பேரூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்காக செயல்படும் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் தற்போது வரை, மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட போத்தனுாரிலேயே செயல்படுகிறது. இதனால், சாடிவயல், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 35 கி.மீ., துாரத்தில் உள்ள போத்தனுாரில் உள்ள பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து செல்லும் நிலை உள்ளது.
வெகுதொலைவு செல்ல வேண்டும் என்பதால், ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
அதனால், பேரூர் உட்கோட்ட எல்லையை தாண்டி, மாநகர போலீஸ் எல்லையில் செயல்படும் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனை, உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிக்குள் கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.