/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொத்து வரி செலுத்த வேண்டுமா... 3, 4 தேதிகளில் முகாம் நடக்கிறது!
/
சொத்து வரி செலுத்த வேண்டுமா... 3, 4 தேதிகளில் முகாம் நடக்கிறது!
சொத்து வரி செலுத்த வேண்டுமா... 3, 4 தேதிகளில் முகாம் நடக்கிறது!
சொத்து வரி செலுத்த வேண்டுமா... 3, 4 தேதிகளில் முகாம் நடக்கிறது!
ADDED : பிப் 01, 2024 12:05 AM
கோவை : கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த, வரும், 3 மற்றும், 4ம் தேதிகளில் காலை, 9:00 முதல் மாலை, 3:00 மணி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
மேற்கு மண்டலம்
35வது வார்டில் இடையர்பாளையம் நாகராஜன் நாகாத்தம்மன் கோவில் பகுதியில், 3ம் தேதி மட்டும், 33வது வார்டில் கவுண்டம்பாளையம் வார்டு அலுவலகம், 42வது வார்டில் வேலாண்டிபாளையம் சத்துணவு கூட வளாகம் ஆகிய இடங்களில், 4ம் தேதி மட்டும் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
கிழக்கு மண்டலம்
7வது, 8வது வார்டுக்கு ஒண்டிப்புதுார் நேரு நகர் கிழக்கு பகுதி, 56வது வார்டில் சுங்கம் மைதானம், 57வது வார்டில் நெசவாளர் காலனி, மேற்கு மண்டலம் 75வது வார்டில் சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் தெரு, தெற்கு மண்டலம் 94வது வார்டில் மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் வளாகம். 97வது வார்டில் ஹவுசிங் யூனிட் பேஸ்-2.
வடக்கு மண்டலம்
15வது வார்டு சுப்ரமணியம்பாளையம் அங்கன்வாடி மையம், 25வது வார்டு காந்தி மாநகர் அரசு ஆரம்பப்பள்ளி, மத்திய மண்டலம் 32வது வார்டு நாராயணசாமி வீதி சிறுவர் பூங்கா, 62வது வார்டு பெருமாள் கோவில் வீதி மாநகராட்சி வணிக வளாகம், 80வது வார்டு கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, 84வது வார்டு ஜி.எம்.நகர் தர்கத் இஸ்லாம் ஆரம்பப்பள்ளியில் வரும், 3ம் தேதி மற்றும், 4ம் தேதிகளில் வரி வசூல் சிறப்பு முகாம் நடைபெறும்.
தவிர, மார்ச் 31 வரை, மாநகராட்சி வரி வசூல் மையங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம் நடைபெறும் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.