/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முறுக்கை நொறுக்க ஆசையா... கொட்டையை கடிக்க ஆசையா!
/
முறுக்கை நொறுக்க ஆசையா... கொட்டையை கடிக்க ஆசையா!
ADDED : டிச 08, 2024 03:11 AM

பல்லை முதுமை காலத்தில் பராமரிக்காததாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் பல்லை இழந்து, ஆரோக்கியத்தையும் இழந்து விடுகின்றனர்.
முதுமையை தொட்டவர்களும், வயதானோரும் பற்களை பாதுகாப்பது எப்படி, பல்லில் ஏற்பட கூடிய பிரச்னைகள் என்ன என்பது குறித்து, பல் டாக்டர் நவீன் குமார் கூறுகிறார்.
பற்களை எவ்வளவு பராமரித்து வந்தாலும், 55 வயதை கடக்கும் போது பல் ஈறுகள் விரிவடைந்து விடுகின்றன. இதனால் பல் இடுக்குகள், பல்லின் நீளம் அதிகரிக்கும். இதன் காரணமாக உணவு பொருட்கள், பல் இடுக்கில் மாட்டிக் கொண்டு ரத்தம் வருதல், வலி போன்றவை ஏற்படும்.
இது, முதுமை காலத்தில் ஏற்பட கூடிய முதல் பிரச்னையாகும். அதேபோல, சிறிய வயதில் பற்களில் பிரச்னை என்றால், 20 முதல் 30 சதவீதம் பேர் அதனை காப்பற்ற நினைப்பது இல்லை.
பல்லை எடுத்து விடுகின்றனர். இதனால், முதுமை காலத்தில் உணவு எடுத்து கொள்ளும் போது, உணவு பொருளின் அரைபடும் தன்மை குறைந்து விடும். அப்போது ஜீரண பிரச்னை, வாயு பிரச்னை, மலசிக்கல், வைட்டமின் குறைபாடு ஏற்படும்.
விழிப்புணர்வு இல்லை
பல் இடுக்குகளில் உணவு பொருட்கள் சிக்குவதால் சொத்தை வரும். அதிகளவு ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு, 2 முதல் 3 மடங்கு பல் பிரச்னைகள் அதிகரிக்கும்.
கால போக்கில் பற்கள் இல்லாமல் கூட போகலாம். அதிக ரத்த அழுத்தத்திற்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு, பற்கள் மேல் சதை வளரலாம்.
அப்போது டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று, மருந்துகளை மாற்றிக் கொள்ள வேண்டும். செயற்கை பல் வைத்துள்ளவர்கள், அதன் கால நேரத்தில் மாற்றி விடவேண்டும். தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.
பெண்களுக்கு வைட்டமின் டி 3 குறைவு காரணமாக, பல் அல்லது தாடையில் பிரச்னை ஏற்படும். முதுமை காலத்தில் பற்கள் குறைந்து விட்டாலோ, உபயோகமற்ற பற்கள் இருந்தாலோ, சிகிச்சை எடுத்து உடனே பற்களை பொருத்திக் கொள்ள வேண்டும்.
காலம் தாழ்த்தும் போது தாடை எலும்பு சுருங்கி விடும். அதன் பின் பற்களை பொருத்துவது கடினம், சில நேரங்களில் பற்கள் நிற்காது. பற்களை பொருத்தவரை ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் செலவும் குறைவு; சேதமும் குறைவு.
பல் பிரச்னைக்கு தீர்வு
வைட்டமின் சி குறைபாடு காரணமாக, பல் பிரச்னைகள் வரலாம். எனவே ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரிக் ஆசிட் உள்ள பழங்களை எடுத்து கொள்ள வேண்டும். உணவருந்திய பின் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். வாய் கொப்பளிக்க வேண்டும்.
வருடத்திற்கு ஒரு முறை அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை, பற்களை டாக்டரிடம் சென்று சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
சிறிய வயதில் பற்களில் பிரச்னை என்றால், 20 முதல் 30 சதவீதம் பேர் அதனை காப்பற்ற நினைப்பது இல்லை.
பல்லை எடுத்து விடுகின்றனர். இதனால், முதுமை காலத்தில் உணவு எடுத்து கொள்ளும் போது, உணவு பொருளின் அரைபடும் தன்மை குறைந்து விடும். அப்போது ஜீரண பிரச்னை, வாயு பிரச்னை, மலசிக்கல், வைட்டமின் குறைபாடு ஏற்படும்.