/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரக்குறைவாக பேசும் அதிகாரிகளை கண்டித்து டாக்டர்கள் சங்கம் போராட்டம்
/
தரக்குறைவாக பேசும் அதிகாரிகளை கண்டித்து டாக்டர்கள் சங்கம் போராட்டம்
தரக்குறைவாக பேசும் அதிகாரிகளை கண்டித்து டாக்டர்கள் சங்கம் போராட்டம்
தரக்குறைவாக பேசும் அதிகாரிகளை கண்டித்து டாக்டர்கள் சங்கம் போராட்டம்
ADDED : நவ 26, 2024 11:51 PM
கோவை; தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்களை தரக்குறைவாக நடத்தும் உயர் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, மாவட்ட, வட்ட, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் உட்பட மருத்துவமனைகளின் டாக்டர்கள் மாநில, மாவட்ட உயர் அதிகாரிகளால் நடத்தப்படும் ஆன்லைன் மற்றும் நேரடி கூட்டங்கள், துறை ரீதியான கூட்டங்கள் அனைத்தையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சுமார் 5,000 டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளது. கூடுதல் பணி சுமையுடன் பணிபுரிந்து வருகிறோம். இந்நிலையில் டாக்டர்களை, உயர் அதிகாரிகள் தரக்குறைவாக நடத்தி வருகின்றனர். டாக்டர்களை தரக்குறைவாக பேசி வரும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில, மாவட்ட அதிகாரிகள் நடத்தும் ஆன்லைன் கூட்டங்களை புறக்கணிக்கும் வகையில் வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறியுள்ளோம்.
சுமார், 30க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து கோவையை சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வெளியேறி உள்ளனர்.
மேலும், வருமுன் காப்போம் முகாம், மாற்றுத்திறனாளிகள் பரிசோதனை முகாம், குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்களில் டாக்டர்கள் பங்கேற்கவில்லை. இப்பிரச்னைக்கு இன்றும் (நேற்று) தீர்வு காணப்படாததால் மகப்பேறு துறையில் அனைத்து அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் நிறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரசு டாக்டர்கள் நடத்தும் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,” என்றார்.