/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
24 மணி நேரமும் டாக்டர் பணியில் இருக்கணும்! மனு கொடுத்து வலியுறுத்தல்
/
24 மணி நேரமும் டாக்டர் பணியில் இருக்கணும்! மனு கொடுத்து வலியுறுத்தல்
24 மணி நேரமும் டாக்டர் பணியில் இருக்கணும்! மனு கொடுத்து வலியுறுத்தல்
24 மணி நேரமும் டாக்டர் பணியில் இருக்கணும்! மனு கொடுத்து வலியுறுத்தல்
ADDED : ஜூலை 21, 2025 10:16 PM
பொள்ளாச்சி; 'கோட்டூர் அரசு மருத்துவமனையில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்,' என, சப் -கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது.தேவம்பாடி வலசு கிராம மக்கள், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
தேவம்பாடி வலசு கிராமத்தின் மெயின் ரோட்டில் இருந்து, அண்ணமார் கோவில் மற்றும் வக்கீல் தோட்டம் வழியாக செல்லும் ரோடு மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்களும், விவசாயிகளும் இவ்வழியாக செல்லும போது பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். இந்த ரோட்டை தார்சாலையாக மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சிரமமாக உள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி ரோட்டை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.
* சிறகுகள் மக்கள் அமைப்பு கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோட்டூர் அரசு மருத்துவமனையில், கோட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஆழியாறு, அங்கலகுறிச்சி, சங்கம்பாளையம், ரமணமுதலிபுதுார், சோமந்துறைசித்துார் பகுதிகளில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை மட்டுமே டாக்டர்களால் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் வரும் வெளிநோயாளிகள், டாக்டர்கள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும்.
காலைநேரங்களில், சர்க்கரை நோயாளிகள், ரத்த பரிசோதனை செய்ய காலதாமதம் ஆவதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். மேலும். மருந்து மாத்திரைகள் கொடுக்க காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, கோட்டூர் அரசு மருத்துவமனையில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர் நியமிக்கவும், ரத்த பரிசோதனைகள் சரியான நேரத்துக்கு எடுப்பதற்கும், மருந்துகள் சரியாக வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.