தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பத்திரப்பதிவு புறக்கணிப்பு ஆவண எழுத்தர் போராட்டம்

பத்திரப்பதிவு புறக்கணிப்பு ஆவண எழுத்தர் போராட்டம்

பத்திரப்பதிவு புறக்கணிப்பு ஆவண எழுத்தர் போராட்டம்


ADDED : நவ 06, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 07:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்னூர்: பத்திர எழுத்தர்கள் போராட்டத்தால் அன்னூர் சார்பதிவாளர் அலுவலகம் இன்று (நவ.,6) வெறிச்சோடியது.

பதிவுத்துறை சார்பில், முதற்கட்டமாக, ஐந்து இடங்களில் பத்திரப்பதிவுக்கான நவீன சேவை மையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு பணிகளை தனியார் மயமாக்கும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, தமிழ்நாடு பத்திர நகல் எழுதுவோர் சங்கம், நவ. 6 மற்றும் 10, 11 ஆகிய மூன்று நாட்கள் பத்திர பதிவை புறக்கணித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்னூரில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு முன்பு பத்திர எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மற்றும் வக்கீல் அலுவலகங்கள் இன்று மூடப்பட்டிருந்தன. அன்னூர் சார்பதிவாளர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.பதிவுத்துறையினர் கூறுகையில், ' மிகவும் குறைந்த அளவில் பத்திரப்பதிவு நடந்தது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us